30,000 கன அடி தண்ணீர் திறப்பால் கால்நடை வளர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை

0 341
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி, தொடர்மழை பெய்து வருவதாலும், முக்கொம்பு மேலணை தடுப்பணையிலிருந்து 30,000 கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிட இருப்பதாலும், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்று கரையோரங்களில் வசிக்கும் கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை ஆற்றின் குறுக்காகவோ அல்லது நீர்வரத்து அதிகமுள்ள வாய்க்காலின் வழியாக நடத்தி செல்லும்பொழுதோ உரிய கவனத்துடன் செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கால்நடைகளில் நோய் அறிகுறி ஏதும் காணப்பட்டால் கால்நடைகளை உடனே அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களுக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்கவேண்டும். கால்நடைகளுக்கு நோய் பரவுவதைத் தடுக்க, பொதுமக்கள் சந்தைகளில் மற்றும் வெளியூர்களில் அல்லது வெளி நபர்களிடம் புதிதாக கால்நடைகள் வாங்குவதையும், விற்பதையும் தவிர்க்க வேண்டும்.

நீர் தேங்கியுள்ள இடங்களில் கால்நடைகள் இருந்தால் கால் குழம்புகளுக்கிடையே புண்வர வாய்ப்புள்ளதால் மழைநீர் மற்றும் சகதிகள் அதிகம் இல்லாத இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டும் என்று கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.