பொதுத் தேர்வில் வென்ற மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் இந்த ஓராண்டு முழுவதும் திருச்சி தெற்கு மாவட்டத்தில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் , பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி, சீறும் சிறப்புமாக தெற்கு மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், மாநகர கழக பொருளாளர் தமிழ்ச்செல்வம் தலைமையில் திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் தொகுதி உட்பட்ட அரசு பள்ளியில் 10 மற்றும் 12 வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் மாநகர துணைச் செயலாளர் பொன் செல்லையா வரவேற்புரை நிகழ்த்த சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசு பொருள்களை 3-வது மண்டல கோட்டத் தலைவர் மு.மதிவாணன் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநகர மாவட்ட கழக நிர்வாகிகள் செங்குட்டுவன், லீலாவேலு சரோஜினி, சந்திரமோகன், நூர் கான் மணிமேகலை, பகுதி கழகச் செயலாளர்கள் மோகன், தர்மராஜ் , நீலமேகம், ராஜ்முகம்மது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.