கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு-உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்..

0 341
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பட்டூரில் 20 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்..

மண்ணச்சநல்லூர் அருகே திருப்பட்டூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரைய்யா. இவரது மகன் அன்பு செல்வன். விவசாயியான இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அங்குள்ள வயல் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு எதிர்பாராத விதமாக 20 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலறிந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி வீரர்கள் சுதர்சன், விக்னேஷ், திவாகரன்,பெரியசாமி, தர்மராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று சுமார் 1.30 மணி நேரம் போராட்டத்திற்கு பின் பசுமாட்டை உயிருடன் மீட்டனர். பின்னர் மாட்டின் உரிமையாளர் அன்பு செல்வனிடம் தீயணைப்பு வீரர்கள் பசு மாட்டை ஒப்படைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.