குட்கா விவகாரத்தில் மொத்த வியாபாரிகளை கண்டுகொள்ளாமல் சிறு குறு வியாபாரிகளிடம் வீரத்தை காட்டும் அதிகாரிகளின் பின்னணி என்ன…!

0 1,197

தமிழக அரசு மற்றும் தமிழக காவல் துறை சார்பாக குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.

மறுப்பதற்கில்லை…
திருச்சியிலும் தினந்தோறும் அங்கு அவ்வளவு குட்கா பொருட்கள் பறிமுதல்… இங்கு இவ்வளவு பறிமுதல் என செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. குற்றம் செய்தவனை விட செய்யத் தூண்டியவனக்கு தான் தண்டனை அதிகம் என சொல்வார்கள்… ஆனால், இந்த குட்கா மற்றும் போதைப் பொருட்கள் விவகாரத்தில் அதிகாரிகள் அப்படி நடந்து கொள்வதாக தெரியவில்லை…!

தினந்தோறும் பணியில் இருக்கிறோம் என்பதற்காக சிறு, குறு வியாபாரிகளிடமும், டீ கடைகளிலும், மளிகை கடைகளில் மட்டுமே அதிகாரிகள் சோதனை தினந்தோறும் நடக்கிறது…. நூறு இருநூறு சம்பாதிக்கும் சிறு வியாபாரிகளிடம் அதிரடி காட்டும் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள், 100 கோடி சம்பாதிக்கும் மொத்த வியாபாரிகளிடம் வீரத்தைக் காட்ட மறுப்பது ஏன்?

இந்த குட்கா பொருட்கள் வந்தது எப்படி? யார் மூலமாக வருகிறது? மாவட்டம் தோறும் எப்படி பிரிந்து செல்கிறது? என்பது அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் கூட கண்டுகொள்ளாமல் பெரிய அளவிலான பொருட்களை மொத்தமாக விற்பனை செய்வோரை விட்டுவிட்டு சிறு குறு கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபடுவதே அதிகாரிகளின் வேலையாக இருக்கிறது!

குட்கா மற்றும் புகையிலை பொருட்களை ஒழிப்பதற்கு கடைகளில் சோதனை நடத்தினால் மட்டும் போதாது….
எனவே, குட்கா மற்றும் போதைப் பொருட்கள் எங்கிருந்து வருகிறது என்பதை மொத்தமாக நிறுத்தினால் மட்டுமே இதற்கு விடிவு காலம் பிறக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.