மனைவி மாயம் கணவன் போலீசில் புகார்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே மனைவி காணவில்லை என கணவன் முசிறி காவல் நிலையத்தில அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முசிறி அருகேயுள்ள தும்பலம் கிராமம் கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (55) இவர் பால் லோடு ஏற்றும் ஆட்டோவில் பணிபுரிந்து வருகிறார், வழக்கம்போல அண்மையில் (செப்டம்பர் 24 ஆம்) தேதி மாலை பணிக்கு சென்று விட்டு இரவு வீட்டில் வந்ததாகவும் அப்போது தனது மனைவி கவிதா (42 ) என்பவர் வீட்டில் இல்லை என்பதை தெரிந்து தனது உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் விசாரித்து தேடி வந்ததில் தனது மனைவி காணவில்லை என முசிறி காவல் நிலையத்தில் சத்தியமூர்த்தி அளித்த புகாரின் பேரில் முசிறி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு மாயமான கவிதாவை தேடி வருகின்றனர்.