TVS டோல்கேட் சாலை சீரமைக்கப்படுமா?

0 237
Stalin trichy visit

 

தஞ்சாவூர் மார்க்கம் சென்னை மார்க்கம் விழுப்புரம் மார்க்கம் நாமக்கல் மார்க்கம் ஆகிய இடங்களில் இருந்து திருச்சி மாநகரத்திற்கு வரும் வாகனங்கள் TVS டோல்கேட் வழியாக உள் நுழைகின்றன. மேலும் சென்னையில் இருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடி, தேவகோட்டை, ஆர்.எஸ்.மங்களம், இராமநாதபுரம், இராமேஸ்வரம், சிவகங்கை, கமுதி, கல்லல், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மீமிசல் செல்லும் அனைத்து வாகனங்களும் திருச்சி ஏர்போர்ட் செல்லும் வாகனங்களும் இந்த சந்திப்பை கடந்து தான் செல்ல முடியும்.

பேருந்துகள் பிரதான சாலையில் இருந்து உள் நுழையுமிடத்தில் போதுமான இடம் இருந்தும் தார்ச்சாலை அமைக்கப்படாததால் மழைக்காலங்களில் பேருந்துகள் இரு சக்கர வாகனங்கள் கார் போன்றவை சகதியில் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

அதேப் போல் எதிர்மார்க்கத்தில் பொன்மலை செல்லும் வாகனங்கள் இந்த சாலை சந்திப்பில் வந்து சாலையை கடக்கின்றனர். அந்த இடத்தில் வடக்கு திசையில் இடம் உள்ளது. அதனை அகலப்படுத்தி சாலையை சரி செய்தால் போக்குவரத்து மிக எளிதாக இருக்கும்.

மேலும் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை மீது வெள்ளை வர்ணம் தெளிவாக இல்லை. வாகனங்கள் வந்து திடீரென பிரேக் பிடிப்பதால் பேருந்துகளில் உள்ளே அமர்ந்து & நின்று பயணம் செய்யும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு சாலை சந்திப்பை சரி செய்திட வாகன ஓட்டிகள் & சாலை பயனீட்டாளர்கள் குழு சார்பில்  கேட்டுக் கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.