ஆட்டோ மோதி பெண் படுகாயம்

0 340
Stalin trichy visit

திருச்சி, ஏப்.10 ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியை சேர்ந்தவர் கண்ணன் அவருடைய மனைவி சுபா (வயது 55). சம்பவத்தன்று மாலை சுபா தனது வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவருக்கு தலை மற்றும் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.