புள்ளம்பாடி அரசுப் பள்ளியில் மகளிர் தின விழா

0 576
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 8  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளியில் வளாகத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது

இந்நிகழ்வில் பெண் ஆசிரியர்களுக்காண இசை நாற்காலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்துப் பெண் ஆசிரியைகளும் கலந்து கொண்டனர். நிறைவாக முதல் பரிசை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்  அனுராதா, இரண்டாம் பரிசை அறிவியல் ஆசிரியர் எஸ். ரீட்டா மேரி பெற்றனர். அனைத்துப் பெண் ஆசிரிய பெருமக்களுக்கும்நினைவுப் பரிசுகளை தலைமையாசிரியர் &ஆண் ஆசிரியர்கள் அனைவரும் வழங்கினர். நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்களும் – மாணவிகளும் மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.

Leave A Reply

Your email address will not be published.