மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 57
trichymail

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் இன்று தனது 43-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் குறிஞ்சி நகரில் தண்ணீர் சரியாக வருகிறதா என்பதையும், கமலா நேரு தெருவில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல் பணியையும், குறிஞ்சி நகரில் சாக்கடையை சுத்தம் செய்தல் பணியையும், அந்தோனியார் கோயில் தெருவில் சாலைப் போடும் பணியையும், ஆயில் மில் மெயின் ரோட்டில் சாக்கடை அடைப்பை சரி செய்தல் பணியையும்,  ஆயில் மில் மெயின் ரோட்டில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல் பணியையும், குறிஞ்சி நகரில் விநாயகர் கோயில் முன்பு சேதமடைந்து இருந்த மின் கம்பத்தை மாற்றியமைக்கும் பணியையும்,  குறிஞ்சி நகரில் சாக்கடையை தூர்வாரி சுத்தம் செய்தல் பணியையும், முருகன் கோயில் தெருவில் சாக்கடையை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்தல் பணியையும்,  காவேரி நகரில் சாலைப் போடும் பணியையும்,  கமலா நேரு தெருவில் சாக்கடையை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்தல் பணியையும்,  கம்பர் தெருவில் சாக்கடையை முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்தல் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

 

 

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.