விதிமீறல் புகார் எதிரொலி: 2 மனமகிழ் மன்றங்களுக்கு ‘சீல்’
திருச்சி, ஜூலை 16 திருச்சியில் எப்.எல்.-2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றம் திரு வானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையிலும், திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலை யிலும் இயங்கி வந்தன. எப்.எல்.-2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்களை பொறுத்தவரை பதிவு செய்யப்பட்ட, அடை யாள அட்டைவைத்திருக்கும் உறுப்பினர்கள் மற்றும் அவர்க ளின் விருந்தினர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கவேண் டும். பதிவு செய்யப்படாத நபர்களுக்கு மது விற்பனை செய் வதோ, தனி நபர்களுக்கு பாட்டில்களை மட்டும் விற்பனை செய்வதோ சட்டவிரோதமானது.
ஆனால் இந்த இரு மனம் கிழ்மன்றங்களில் விதிமுறைகளை மீறி வெளிநபர்களுக்கு மதுவிற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் திருச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீ சார் இருமனமகிழ்மன்றங்களிலும் சோதனை மேற்கொண்ட னர். அப்போது, அவர்கள் வெளி நபர்களுக்கு மதுவிற்பனை செய்வது உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் கொடுத்த அறிக் கையின் பேரில் 2 மனமகிழ் மன்றங்களையும் பூட்டி சீல் வைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில், நேற்று 2 மனமகிழ்மன்றங்களையும் கலால் பிரிவு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.