பருவ மழையை எதிர்கொள்வது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி

0 215
Stalin trichy visit

பேரிடர் மேலாண்மை ஒத்திகை மற்றும் தீபாவளியொட்டி பாதுகாப்பான வெடி வெடிப்பது தொடர்பான தீயணைப்பு துறை வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது

வட கிழக்கு பருவமழை ஆரம்பம் ஆக உள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் பருவ மழையை எதிர்கொள்வது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு
தீபாவளி திருநாளில் வெடி வெடிக்கும் போது பாதுகாப்பான முறையில் வெடி வெடிப்பதை தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருச்சி தீயணைப்பு துறை அலுவலர் அனுஷியா தலைமையில் 10க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று பேரிடர் மேலாண்மை குறித்தும் தீ தடுப்பு முறைகளை குறித்து ஒத்திகை செய்து காட்டினர். அதில் வெடி வெடிக்கும் முறைகள் அதனை அப்புறப்படுத்துதல், வெடி வெடிக்கும் போது ஏற்படும் தீயை அணைப்பதற்கு உடனடியாக அணுக வேண்டிய தொலைபேசி எண்கள் 101, 112 ஆகியவை குறித்து அறிவுறுத்தினர்.

மேலும் தீபாவளி அன்று பாதுகாப்பான முறையில் வெடிகள் வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.