தென்னையில் வேர் ஊட்டம் : வேளாண் மாணவர்கள் செயல்விளக்கம்

0 156
Stalin trichy visit

விவசாயிகளுக்கு தென்னையில் வேர் ஊட்டம் செயல் விளக்கம் செய்து காட்டிய
காந்திகிராம பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமயங்குடி கிராமத்தில்விவசாயிகளுக்கு தென்னையில் வேர் ஊட்டம் செயல் விளக்கம் செய்து காட்டிய
காந்தி கிராம பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள்.

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல் பள்ளியில் இளங்கலை வேளாண்மை பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் கு. சிவ அனவரதன், ம. தமிழ்முழக்கன், தி. கருப்பணன், மு ரூபன் மற்றும் ஐ.ஜெய்சன் ஐசக் ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் திருச்சி லால்குடி வட்டாரம் சிறுமயங்குடி ஊராட்சியில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சிறுமயங்குடி பகுதியில் விவசாயிகளுக்கு தென்னையில் வேர் ஊட்டம் செயல் விளக்கம் செய்து காட்டினர்.மேலும் அதை பற்றி நன்மைகளை விவசாயிகளிடம் தெளிவாக எடுத்து உரைத்தனர் .மேலும்,கரும்பு குப்பை உரம் செய்வது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர். இதில் கரும்பு சக்கை எரிப்பில் ஏற்படும் பாதிப்பை பற்றியும் மாணவர்கள் எடுத்துரைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.