இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வாலிபர் கைது

0 445
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வேங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர்(30). அதேப் பகுதியைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி(27). திருச்சி அரசு மருத்துவமனையில் தனியார் ஹவுஸ் கீப்பிங்கில் வேலை செய்து வருகிறார்.

ராஜசேகர், உமாமகேஸ்வரி ஆகியோர் உறவினர்கள் ஆவர். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 5 மாதங்களாக காதலித்து வந்தனர். உமாமகேஸ்வரியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சமயபுரம் பகுதியில் உள்ள லாட்ஜ்க்கு அவரை அழைத்து சென்று பலமுறை அவருடன் ராஜசேகர் தனிமையில் இருந்தார்.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள ராஜசேகரை உமாமகேஸ்வரி வற்புறுத்தினார். இதற்கு ராஜசேகர் மறுத்து விட்டார். இதுகுறித்து கடந்த ஆக. 31ம் தேதி திருவெறும்பூர் மகளிர் காவல் நிலையத்தில் உமாமகேஸ்வரி புகார் கொடுத்தார்.

சம்பவம் நடந்த இடம், லால்குடி மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமயபுரம் என்பதால், புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் மனு ரசீது மட்டும் வழங்கினர். இதையடுத்து லால்குடி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மற்றும் போலீசார் ராஜசேகர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.