லாட்டரி சீட்டு எண்கள் எழுதப்பட்ட துண்டு சீட்டை விற்ற 3 பேர் கைது

0 315
Stalin trichy visit

திருச்சி கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அங்கு உள்ள ஒரு டீக்கடை முன்பு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண்கள் எழுதப்பட்ட துண்டு சீட்டை கையில் வைத்து மற்றவர்களுக்கு விற்றுக்கொண்டிருந்ததாக திருவெரும்பூர் பகுதியை சேர்ந்த ஜபருல்லா(24), உறையூர் பங்காளி தெருவைச் சேர்ந்த ஜின்னா என்கிற முகமது அலி ஜின்னா (45), மதுரை ரோடு நத்தர்ஷா தர்கா பகுதியை சேர்ந்த நாகூர் அனிபா (44) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 30 லாட்டரி சீட்டு எண்கள் எழுதப்பட்ட துண்டு சீட்டுகள் மற்றும் பணம் ரூ.450-ஐ பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.