திருச்சியில் ரூ.11½ லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது

0 33
Stalin trichy visit

திருச்சி, ஆக.10 திருச்சியில், அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி
ரூ.11½ லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது மற்றொரு சம்பவத்தில் மூதாட்டியை ஏமாற்றிய 2 பேருக்கு வலைவீச்சு

திருச்சி திருவானைக்கா வல் பகுதியை சேர்ந்தவர் ஆதி மூலம் (வயது 50). இவருக்கு திண்டுக்கல் மாவட்டம் ஓட் உன்சத்திரத்தை சேர்ந்த மதி வாணன் (37) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அப் போது மதிவாணன், தான் கோவையில் காய்கறி கடை நடத்தி வருவதாகவும், இந்த தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என் றும் ஆதிமூலத்திடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை நம்பிய ஆதிமூலம், தனது வங்கி கணக்கில் இருந்து பல்வேறு கட்டங்களாக மொத்தம் ரூ.11 லட்சத்து 70 கொடுத்துள்ளார். ஆனால் ஆயிரத்தை மதிவாணனிடம் நீண்ட நாட்கள் ஆகியும்லாப தொகையை கொடுக்க வில்லை. மேலும் ஆதிமூலம் முதலீடு செய்த பணத்தையும் திருப்பிக்கொடுக்கவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட் டதை உணர்ந்த ஆதிமூலம், இது குறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்ப திவு செய்து, பணமோசடியில் ஈடுபட்ட மதிவாணனை கைது செய்தனர்.

இதே போல்   போல் திருச்சி புத்தூர் மந்தை  குப்பம்மாள் (70). இவரிடம், பீமநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன், சின்னதுரை ஆகிய 2 பேர் ஏலச்சீட்டு நிறுவனம்
நடத்தி வருவதாக கூறி ரூ.1 லட் சத்து 50 ஆயிரத்தை பெற்றுள்ள னர். வெகுநாட்கள் ஆகியும் , அந்த பணத்தை திருப்பி தராததால், குப்பம்மாள் இதுகுறித்து பாலசுப்பிரமணியன், ன், சின்ன துரை ஆகியோரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கா மல் இழுத்தடித்து வந்துள்ளனர்.
தான் ஏமாற்றப் அத்தை உணர்ந்த குப்பம்மாள் இதுகுறித்து திருச்சி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் கண்டோன்மெண்ட்  காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் சம்பவ இடம் உறையூர் போலீஸ்நிலை யத்திற்கு உட்பட்ட எல்லைக்குள் இருப்பதால் இந்த வழக்கு உறையூர் போலீஸ் நிலையத் திற்கு மாற்றப்பட்டது. அதன்படி  வழக்கில்   தலைமறைவான சுப்பிரமணியன், சின்னதுரையை உறையூர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.