திருச்சியில் துணிகரம் : வீட்டின் கதவை திறந்து ரூ. 1 லட்சம் திருடிய மர்ம நபர்

0 14
Stalin trichy visit

திருச்சி, ஆக.10  திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: வீட்டின் கதவை திறந்து ரூ.1 லட்சம் திருடிய மர்ம நபர் – பொதுமக்கள் திரண்டதால் பீரோவில் இருந்த நகைகள் தப்பின

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை தபால் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 58). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். – இதில் ஒரு மகளுக்கு திருமணமாகி கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். தன்ராஜ் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு, தனது குடும்பத்துடன் அரியலூரில் உள்ள தனது குலதெய்வம் கோவிலுக்கு வழிபட சென்றார்.
மதியம் 2 மணி அளவில் தன்ராஜ் வீட்டின் முன்பு நின்ற ஒரு மர்ம நபர், சாவி யால் வீட்டின் கதவை திறந்து  உள்ளே சென்றுள்ளார். இதனை எதிர் வீட்டு மாடியில் இருந்த இளம் பெண் – ஒருவர் பார்த்து, தனது தாய் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்துள் ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. மேலும் பீரோவை உடைக்கும் முயற் சியிலும் அந்த மர்மநபர் ஈடு பட்டிருந்ததும் தெரியவந்தது. அந்த பீரோவில் ஏராளமான நகைகள் இருந்தன. ஆனால் அக்கம் பக்கத்தினர் வந்ததை அறிந்து அந்த பீரோவை உடைக்கும் முயற்சியை கைவிட்டு, அந்த நபர் சென்ற தால் அதிர்ஷ்டவசமாக அந்த நகைகள் தப்பின.

இதுகுறித்து உடனடியாக தன்ராஜின் உறவினர்கள் பொன்மலை போலீஸ் நிலை யத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு போலீசார் மற்றும் கைரேகை நிபு ணர்கள் வந்து பார்வையிட்டு, தடயங்களை சேகரித்தனர்.
வீட்டின் கதவு அருகில் உள்ள மின் மீட்டர் பெட்டியில் சாவியை தன்ராஜ் வைத்து விட்டு சென்றதும். அதனைத் தெரிந்த நபர்தான் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசாரிடம் அப்பகுதியினர் தெரிவித்தனர். மேலும் போலீசார் அந்த பகுதியின் அருகே உள்ள பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா வில் பதிவாகியிருந்த மர்மநப ரின் உருவத்தை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.