லால்குடியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

0 213
Stalin trichy visit

திருச்சி, ஏப். 29  திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள வடக்கு சீனிவாசபுரத்தில் வீட்டின் மாடியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள வடக்கு சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர்  சசிகுமார் (24) . இவருக்கு மது பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளார. இந்நிலையில் நேற்று வீட்டின் மாடியில் உள்ள அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.