மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சேகர் இவர்து மகன் கார்த்திக் (22) இவர் பி.காம் பட்டதாரி ஆவார் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் தன்னுடைய நண்பர்கள் மூலம் வீடுகளுக்கு சுண்ணாம்பு அடிக்கும் வேலைக்கு செய்து வந்துள்ளார் இன்று வழக்கம்போல் தனது சக ஊழியர்களுடன் துறையூர் காட்டு அங்காயி கோவில் அருகே பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்றார் அப்போது இவர் பெயிண்ட் அடிக்கும் பணியில் இருந்த போது தலைக்கு மேல் சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் எதிர்பாராத விதமாக மோதியதில் அவர் மேல் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் துறையூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்சாரத்தை தடை படுத்தி அவரது உடலை கைப்பற்றி துறையூர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர் குடல் குழு ஆய்வுக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் பட்டதாரி இளைஞர் மின்சார தாக்கி உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது