சமயபுரம் சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் இலவச கொரோனா சிகிச்சை மையம்

0 977
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்கு கொரோனா இலவச மருத்துவ சிகிச்சை வார்டினை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் துவக்கி் வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது… இந்த மருந்துவமனை 360 படுக்கை வசதிகளுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்கு மருத்துவமனை மூலம் இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க கடந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்காக 150 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு ஒதுக்கப்பட்டு சிகிச்சை தொடங்கியது. ஆக்ஸிஜன் வசதியுடன் 60 படுக்கைகள் உள்ளது. அதில் அதி தீவிர சிகிச்சைக்கு 15 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 110 படுக்கைகள் லேசான மற்றும் மிதமான நோய்தொற்று உள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மீதமுள்ள 210 படுக்கைகள் மூலம் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 105 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு 65 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போது 40 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் எங்களது மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான காப்பீடு திட்டம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்காக இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 125 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இலவச மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். மண்ணச்சநல்லூர் தொகுதியில் உள்ள கொரோனா நோயாளிகள் இலவச மருத்துவ சிகிச்சைகளை பயன்படுத்திக் கொள ளுமாறு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் தொற்றாளர்களை பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் சந்தித்து நலம் விசாரித்தார்…

 

Leave A Reply

Your email address will not be published.