அரியமங்கலம் குப்பை கிடங்கு பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் சீரமைப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பொதுமக்கள் நன்றி
திருவெறும்பூர் தொகுதியில் அரியமங்கலம் பகுதியில் அமைந்துள்ள குப்பை கிடங்கை சில தினங்களுக்கு முன்பாக பார்வையிடச் சென்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் காட்டூர் பகுதி அரியமங்கலம் 29வது வார்டு ஜெகநாதபுரம் ஸ்டாலின் நகரைச்சேர்ந்த பகுதி மக்கள் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் அடைப்பை சரி செய்து தரும்படி அமைச்சரிடம் வைத்த கோரிக்கை வைத்தனர் அதனை உடனடியாக ஏற்று அமைச்சர் அருகிலிருந்த மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் சரி செய்ய கூறியதை அடுத்து இரண்டு தினங்களில் முழுவதுமாக கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதுஅந்த பகுதியில் உள்ள மக்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக சரி செய்து கொடுத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்