ட்ரோன் காமிரா மூலம் கண்காணித்த திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா

0 743
Stalin trichy visit

திருச்சியில் 50 இடங்களில் சோதனை மையங்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக மாநகர காவல்துறையினர், ட்ரோன் கேமரா மூலமும் கண்காணித்துவருகிறார்கள். ‌‌‌‌‌இந்நிலையில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனிவிஜயா ட்ரோன் காமிரா மூலம் கண்காணித்தார். தொடர்ந்து காவல்துறையினர் கண்காணிப்பின்போது, திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட விசுவாஸ் நகர் பகுதியில் பள்ளி மாணவர்கள் பெரிய மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. ட்ரோன் வருவதை பார்த்து அங்கிருந்து அனைவரும் ஓட்டம் பிடித்து ரயில் தண்டவாளத்தில் ஓடினர். பின்னர் அங்கிருந்த முட்புதரில் ஒளிந்துகொண்டனர். இதையடுத்து அவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

 

Leave A Reply

Your email address will not be published.