இலங்கைத் தமிழர்கள் முகாமில் அமைச்சர்கள் ஆய்வு

0 808
Stalin trichy visit

திருச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி N. சிவா உள்ளிட்டோர் திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கைத் தமிழர்கள்ள் முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்..இதனை தொடர்ந்து திருச்சி மாநகராம் கொட்டப்பட்டு அகதிகள் முகாமினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்…

 

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இலங்கைத் தமிழர்கள்  முகாமில் அல்லாமல் வெளியில் காவல்துறையில் பதிவு செய்து வாழும் இலங்கைத் தமிழர் குடும்பத்திற்கு கொரோனா கால நிவாரண நிதி ரூபாய் 4000 வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொரோனா கால நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்….தமிழகத்தில் மொத்தம் 108 அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த முகாமில் வசித்துவரும் குடும்பங்களின் அடிப்படைத் தேவைகள், கல்வி, குடியுரிமை,தொடர்பான  ஆய்வுகளை திருச்சியிலிருந்து துவக்கியுள்ளோம்.மேலும் இதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய .கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

15 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு தலா 4 ஆயிரம் வீதம் மொத்தம் 5.12 கோடி மதிப்பிலான நிவாரண உதவி தொகை மற்றும் பொருட்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் விடுதலை குறித்த நடவடிக்கைக்கு முதலமைச்சரோடு கலந்து ஆலோசிக்கபடும்.
முகாம்களில் வசித்து வரக்கூடிய இலங்கைத் தமிழர்களின் செல்போன்கள் குற்ற பின்னணியில் ஈடுபடுவதால் அதற்கான நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பிய போது
குற்றம் யார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், இனிகோ இருதயராஜ்,அப்துல் சமத்,ஸ்டாலின் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.