திருச்சி மணிகண்டம் அருகே முட்புதறில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
திருச்சி மணிகண்டம் அருகே முட்புதறில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை – சைல்டுலைன் அமைப்பினர் வாயிலாக பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வரும் நிலையில்,குழந்தையின் உறவினர்கள் பற்றி தகவல் தெரிந்தால் குழந்தைகள் நலக்குழு மையத்தை நாடும்படி மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தல்
திருச்சி மணிகண்டம் ஒன்றியம் அருகே உள்ள கல்லுக்குடியில் இன்பன்ட் ஜிசஸ் ஐடிஐ கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரிக்கு அருகில் உள்ள முட்புதரில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி பச்சிளம் குழந்தை ஒன்று கேட்பாரற்று கிடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைக்கப் பெற்றதன் பேரில்
சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர்கள் அந்த குழந்தை மீட்டனர்.பின்னர் அந்த குழந்தைக்கு டயானா என்று பெயரிடப்பட்டு சாக்சீடு – புனித மார்ட்டின் சிறப்பு தத்துவனே மையத்தில் கவனிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் இந்த குழந்தை படத்தை காண்பவர்களில் உறவினர்கள் பற்றிய தகவல் தெரிந்தால்21 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகம் அல்லது கலையரங்கம் அருகில் உள்ள குழந்தைகள் நலக்குழு மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.
அதேபோல் தகவல் ஏதும் கிடைக்கப் பெறாத பட்சத்தில் குழந்தையை சட்டப்படி தத்து எடுத்துக்கொள்ள தடையில்லாச் சான்று வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.