உத்தமர் கோயில் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் திடீர் தீ விபத்து.

0 212
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உத்தமர் கோயில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கீழத் தெருவை சேர்ந்த பழனிச்சாமி மகன் 21 வயதான பவித்ரன். இவர் நெ 1 டோல்கேட்டிலிருந்து திருவாசியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது உத்தமர்கோவில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது.உடனே ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து எரிந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தை அணைத்தனர்.இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பில்லாமல் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.