எய்டு இந்தியா தொண்டு நிறுவனம் லால்குடி மருத்துவமனைக்கு 4 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கல்

0 357
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு AIDINDIA தொண்டு நிறுவனத்தின் மூலம் சுமார் 3 லட்சம் மதிப்புள்ள 4 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை வழங்கினர்..லால்குடி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் 40 படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொரோனா தொற்றாளர்களுக்கு பயன்படும் வகையில் AIDINDIA தொண்டு நிறுவனத்தின் மூலம் மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு முன்னிலையில் முதன்மை மருத்துவ அலுவலர் செழியனிடம் AIDINDIA நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கினைப்பாளர் ராஜபாண்டியன் வழங்கினார். இந்நிகழ்வில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்,ஊராட்சி ஒன்றிய தலைவர் T.இரவிச்சந்திரன், ஆகியோர் உடனிருந்தனர். AIDINDIA நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் .இராஜபாண்டியன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.