வாழ்வாதாரம் பாதித்த 120 குடும்பங்களுக்கு இந்திய வளர்ச்சி இயக்கம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்

0 312
Stalin trichy visit

வாழ்வாதாரம் பாதித்த 120 குடும்பங்களுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருட்களை இந்திய வளர்ச்சி இயக்கம் வழங்கினார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இந்திய வளர்ச்சி இயக்கம் (AID INDIA) தொண்டு நிறுவனத்தின் சார்பில் ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள உணவுப்பொருட்களை வழங்கினர்.கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.இதனால் வீட்டிற்க்குள் முடங்கிய ஏழை,எளிய மக்களின் வாழ்வாதாரம் வருமானமின்றி முற்றிலும் முடங்கியது.இந்நிலையில்கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் பாதித்த ஏழை,எளிய 120 குடும்பங்களுக்கு ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள அரிசி எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை(1.2 லட்சம்) லால்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார்.இதன்மூலம் லால்குடி மற்றும் புள்ளம்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த வாழ்வாதாரம் பாதித்த 120 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக இந்திய வளர்ச்சி இயக்கம் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இந்தியா வளர்ச்சி இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜபாண்டியன் மற்றும் ஒன்றிய கருத்தாளர்கள் எலிசபெத் ராணி ரேணுகா கலந்துகொண்டனர்.இதற்க்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜபாண்டியன் செய்திருந்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.