குளித்தலை போக்குவரத்து காவல் ஆய்வாளரின் மனிதநேயமிக்க பணி

0 918
Stalin trichy visit

நேற்றிரவு (2.03.2021 ) 11.00 மணியளவில் கணேஷ் என்பவரும் அவரது மனைவி சுமதி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சுமதியின் அப்பா அவர்கள் இறந்துவிட்டார் என்று இருச்சக்கர வாகனத்தில் கோயம்புத்தூரில் இருந்து திருச்சி மலைக்கோட்டை பாபு ரோட்டில் உள்ள அவர்கள் இல்லத்திற்கு செல்லும் வழியில் குளித்தலை குறப்பாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது அவர்கள் வந்த இருச்சக்கர வாகனம் பஞ்சர் ஆகிவிட்டது இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கொட்டும் மழையில் நின்று கொண்டிருந்த அந்த தம்பதிகளையும் குழந்தைகளையும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குளித்தலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாவுக்கரசு கொட்டும் மழையில் நின்று கொண்டிருந்த அவர்களைக் கண்டு விசாரித்த போது அப்பாவின் இறப்புக்கு சென்று கொண்டிருந்த போது வாகனம் பஞ்சர் ஆகிவிட்டது என்று தெரிந்தவுடன் பஞ்சர் ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்த போது மழை காரணமாகவும் ஊரடங்கு காலம் என்பதாலும் கடைகள் இல்லாத காரணத்தால் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாவுக்கரசு தனது நண்பர் விஜய் மக்கள் இயக்க தலைவர் திரு.சதாசிவம் அவர்களிடம் கூறி அவரது கார் மூலம் அவர்களை திருச்சியில் அவர்கள் இல்லத்தில் விட்டுவிட்டு வருமாறு கூறப்பட்டது அவரும் உடனடியாக ஒத்துக்கொண்டு அவர்களை திருச்சியில் அவருடைய இல்லத்தில் விடப்பட்டது ஊரடங்கு காலத்தின் இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்ததற்கு நெகிழ்ச்சியுடன் காவல்துறையினருக்கு மனமார நன்றி தெரிவித்தனர்…

 

Leave A Reply

Your email address will not be published.