கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் : அமைச்சர் கே.என்.நேரு
கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்…… நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு பேட்டி.இன்று காலை ஒரிசாவில் இருந்து ரயில் மூலம் 8 டன் திரவ ஆக்சிஜன் திருச்சி வந்தது. அதனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு ஒரிசாவில் இருந்து 80 டன் ஆக்சிஜன் திருச்சி வந்துள்ளது. இங்கிருந்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு 12 டன்,தஞ்சை மெடிக்கல் கல்லூரிக்கு 12 டன், மயிலாடுதுறை, கும்பகோணம், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், நாகை அரசு மருத்துவமனைகளுக்கு இந்த 80 டன் ஆக்ஸிஜன் பகிர்ந்து அனுப்பப்படுகிறது.தற்போது கொரோனா தாக்கம் குறைந்தது வருவதால் பெரும்பாலான மருத்துவ மனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளது.திருச்சி மாவட்டத்திற்கு தேவையானவை 13 டன் ஆக்ஸிஜன் இருப்பில் உள்ளது. தடுப்பூசி தேவை அதிகரித்து வரும் சூழலில் தேவையான தடுப்பூசிகளை பெற தமிழக முதல்வர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.திருச்சி மாவட்டம் லால்குடி, தொட்டியம், மணப்பாறை, துறையூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுகைகளை தயார் நிலையில் வைத்துள்ளோம்.கொரோனா மூன்றாவது அலை என்ற நிலை வரக்கூடாது. அவ்வாறு வரும் பட்சத்தில், அதனை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். தற்போது ஆக்சிசன் தேவையான அளவு இருப்பு இருந்தாலும்கூட திருச்சி திருவெறும்பூர் BHEL நிறுவனத்தில் கூடுதலாக ஆக்ஸிஜன் தயாரிக்கும் வகையில் plant அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.