காஜாமலை கொரோனா மையத்தில் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் கே.என்.நேரு
காஜாமலைபாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளிகள் இன்று அமைச்சர் கே.என்.நேரு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ..இந்த கொரோனா மையத்தில் 227 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 162 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 63 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ,மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார், முசிறி காடுவெட்டி தியாகராஜன்,ஸ்ரீரங்கம் பழனியாண்டி, திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ் மற்றும் வணிக வரி துறை அதிகாரி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…