திருச்சியில் தற்காலிக ஊழியர்கள் போராட்டம் : ஆளும் கட்சி பிரமுகர் மீது குற்றச்சாட்டால் பரபரப்பு
ஆளும் கட்சி பிரமுகரின் தலையீடு காரணமாக தங்களின் வேலை மறுக்கப்பட்டதைக் கண்டித்து திருச்சியில் தற்காலி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.திருச்சி மாநகராட்சியில் வீடு விடாக சென்று பொதுமக்களுக்கு ஆக்சிஜன் அளவு சரிபார்ப்பதற்காக தற்காலிக அடிப்டையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் திருச்சி பொன்மலைக் கோட்ட அலுவலகத்தில் 46 ஆவது வார்டில் 15 பேர் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 5 நாட்களாக பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு பணித்தளம் செய்ய அனுமதிக்கவில்லை. இதனிடையே ஆளும் கட்சியை சேர்ந்த புஷ்பராஜ் என்பவர் அவருக்கு வேண்டிய 10 பேரை புதிதாக நியமித்திருப்பதாகவும் அதனால் தங்களுக்கு பணி வழங்கவில்லை என்று தற்காலிக வேலையை இழந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.ஊரடங்கு காரணமாக தாங்கள் வேலை இல்லாத காரணத்தால் தற்காலிக வேலைக்கு வந்ததாகவும், 5 நாட்கள் வேலை செய்த நிலையில் ஆளும் கட்சி பிரமுகர் தலையீடு காரணமாக அந்த வேலையும் பறிபோய் உள்ளதால் நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.