சசிகலாவை கண்டித்து திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி மாவட்ட புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பாக மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், கழக செயலாளர்கள் கூட்டம் இன்று தில்லைநகரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்று வியக்கும் வண்ணம் தமிழகத்தில் 5 ஆண்டுகள் வெற்றி கனவை நிறைவேற்றி உள்ளனர் என்றும், கழகத்தின் தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது என்றும், 66 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் நலனுக்காக சட்டமன்றத்தில் உரக்க குரல் எழுப்பி வருகின்றனர் என்றும், இந்தநிலையில் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி, கழகத்திற்கும், வளர்ச்சிக்கும் புகழுக்கும், களங்கம் விளைவிக்கும் அனைவரையும் கழகத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து வாக்காள பெருமக்களுக்கு நன்றியையும், கொரோனா நோய் தொற்றால் இறக்இ நேரிட்டவர்களுக்கு அவர்களது இறப்பு சான்றிதழில் கொரோனாவால் இறந்தார்கள் என்று குறிப்பிடுவது இல்லை என்றும், மாறாக வேறு காரணங்களால் இறந்ததாக சான்றிதழ் தருவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது என்றும், உடனடியாக தமிழக அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
மேலும் அந்தநல்லூர் வடக்கு ஒன்றியத்தில் பெட்டவாய்த்தலை பழங்காவேரி கிராமத்தில் கல்வெட்டை உடைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.