“நான் திமுக எம்பி தான்” – பச்சைக்கொடி காட்டிய பாரிவேந்தர்!!

0 686
Stalin trichy visit

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் பாரிவேந்தர். இவர் தனது சொந்த நிதியிலிருந்து திருச்சி லால்குடி அரசு மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகிறார்.இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் பாரி வேந்தர் தனது சொந்த நிதியிலிருந்து 17 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்சிசன் செறியூட்டிகள் அரசு மருத்துவமனைக்கு வழங்கினார்.

 

ரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் கொரோனா  நோய்த்தொற்று காரணமாக அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்களை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி வருகிறார் .அதன் ஒரு பகுதியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு இனறு
17 லட்ச ரூபாய் மதிப்பிலான நவீன வசதிகளுடன் கூடிய  ஆம்புலன்ஸ் வாகனத்தையும்,3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 4 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளையும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு விடம் ஒப்படைத்தார். இந்நிகழ்வில்  திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்.

மீண்டும் திமுகவில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா ? என்ற கேள்விக்கு”நான் திமுக எம்பி தான்”‌. அரசியல் என்பது தேர்தல் நேரத்தில் பேச வேண்டியது. என் தொகுதி மக்களுக்கும், என்னை தேர்ந்தெடுத்தவர்களுக்கும் சேவை செய்வது தான் எனது வேலை. பொது மக்களது தேவையை பூர்த்தி செய்வதுதான் எனது வேலை. அரசியல் பேச்சுக்கள் தற்போது தேவையில்லை. நான் திமுக எம்பி தான் என தெரிவித்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வரை இந்திய ஜனநாயக கட்சியானது திமுகவுடன் கூட்டணி யில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நேரத்தில் திமுகவில் இருந்து விலகி மக்கள் நீதி மய்யத்தில் கூட்டணி வைத்த நிலையில் தமிழகத்தில் ஒரு சீட் கூட பெறாமல் படுதோல்வி அடைந்தனர்.
இந்த நிலையில் “நான் திமுக எம்பி தான்” என திமுகவிற்கு பாரிவேந்தர் பச்சைகொடி காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.