சிறுகனூர் காவல் நிலையத்தில் உயர் அதிகாரிகள் திடீர் ஆய்வு.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சுமதி. இவர் மீது பொதுமக்கள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் போலீஸ் உயரதிகாரிகளுக்கு புகாராக சென்றன. மேலும் கொரோனா காலகட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.அந்த மது பாட்டில்களில் எண்ணிக்கையை குறைத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த புகாரின் அடிப்படையில் நேற்று ஏடிஎஸ்பி பால்வண்ணநாதன் காவல் நிலையத்தில் திடீர் என வந்து ஆய்வு மேற்கொண்டார் அப்போது காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் எண்ணிக்கை ஆகியவற்றை சரிபார்த்ததாக காவல்நிலைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.