திருச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் நாளை வருகை : பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் ஆணையர், சரக காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு

0 240
Stalin trichy visit

நாளை தமிழக முதலமைச்சர் பங்கேற்க இருக்கும் விழா நடக்கும் திருச்சி NIT கல்லூரியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர். Z. ஆனி விஜயா ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்திருச்சி NIT வளாகத்தில் தமிழக அரசு சார்பில் கோவிட் கேட் வார்ட் பயன்பாட்டிற்காக தனிமைபடுத்துதல் மற்றும் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனை நாளை மாலை நடக்கும் அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் திறந்து வைத்து பின்னர் அரசு அதிகாரிகள் மற்றும் முன்களப் பணியாளர்களிடம் ஆலோசனை நடத்துகிறார் இதனை முன்னிட்டு விழா நடைபெறும் இடத்தை இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா ஆகியோர் பார்வையிட்டு கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர் உடன் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.