ஆசிரியர்கள் ஊதியம் பாதியாக குறைப்பா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்

0 818
Stalin trichy visit

ஆசிரியர் ஊதியம் பாதியாக குறைப்பா?பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ரூபாய் 17.34 கோடி செலவில் மேம்படுத்தும் பணி கடந்த 2018 ஆண்டு மே மாதம் தொடங்கியது. 24 மாதங்களில் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் கொரோனா காரணமாக பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இடையூறுகள் இடையே தொடர்ந்து பணியானது மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது சுமார் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தற்போது கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 30 பேருந்துகள் நிறுத்தக் கூடிய வசதி உள்ளது. தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 53 கடைகள் உள்ளது. இதில் 5 உணவகங்கள், காவல் உதவி மையம், கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தரைதளத்தில் 350 இருசக்கர வாகனங்கள் நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார் .அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவடைந்து முழு பயன்பாட்டிற்கு வரும். இங்கு 53 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கடைகள் வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.அரியமங்கலம் குப்பை கிடங்கில் நாளொன்றுக்கு 1500 டன் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக்கப்பட்டு வருகிறது.இன்னும் ஒரு வருட காலத்திற்குள் குப்பைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு விடும்.தற்போதைய சூழலில் குப்பை கிடங்கை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. அதற்கான இடமும் இல்லை. 100 சதவீதம் மாணவர்களை தொடர்பு கொள்ள முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது. நிறைய மாணவர்களிடம் இன்னும் ஸ்மார்ட்போன் கூட இல்லாத நிலை உள்ளது. இருப்பினும் மாணவர்கள் கல்வி இடைவெளி நேரக் கூடாது என்பதற்காக யூனிட் Test நடத்தப்பட உள்ளன. புதிய கல்விக் கொள்கை குறித்து இதுவரை மத்திய அரசிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை என்றார்.தற்போது பணி எதுவும் இல்லாத நிலையில் ஆசிரியர் சம்பளத்தை பாதியாக குறைக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளதே? என்ற கேள்விக்கு பதிலளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்களின் ஊதியத்தை பாதியாக குறைத்து முன்கள பணியாளர்களுக்கு ஊதியத்தை அதிகப்படுத்துவது குறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு வாட்ஸ் அப் மூலம் அறிவுறுத்தல்கள் வந்த வண்ணம் உள்ளது. இது தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய முடிவெடுக்கப்படும் என்றார்

 

Leave A Reply

Your email address will not be published.