திருச்சியில் நேற்று மிதமான மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மிதமானது முதல் கன மழை பதிவாகி உள்ளது.திருச்சி நகர் பகுதிகளைவிட புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மழை பதிவானது – அதிகபட்சமாக திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 70.40 மி.மீ மழையும்,திருச்சி ஜங்சனில் 49மி.மீ மழையும் பதிவு.
இதே போல் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இடி மின்னல் மட்டும் சூறைக்காற்றுடன் கூடிய கன மழை பதிவாகி உள்ளது – புறநகர் பகுதிகளில் அதிக பட்சமாக துறையூரை அடுத்த தாத்தங்கரப்பேட்டையில் 75 மி.மீ மழையும்,முசிறியில் 40 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.
இதேபோல் பொன்மலையில் 34.40 மில்லி.மீட்டர்,திருச்சி நகர்ப்புற பகுதிகளில் 42 மில்லி மீட்டர்,சமயபுரம் பகுதிகளில் 27.40 மில்லி மீட்டர்,கள்ளிக்குடிய 23.45 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகி உள்ளது.
கடந்த சில நாட்களாக திருச்சியில் பகல் நேரங்களில் கடுமையான வெயிலால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு பெய்த மழையினால் குளிர்ச்சியான சூழல் நிலவியது