திருச்சி எல்ஃபின் நிதி நிறுவனம் மீது ரூ. 4.68 கோடி மோசடி புகார்

0 691
Stalin trichy visit

திருச்சி மாநகரம் மன்னார்புரத்தில் எல்ஃபின் நிதி நிறுவனம் (Elfin e -com private ltd) மற்றும் அறம் மக்கள் நலச் சங்கம் செயல்பட்டு வருகின்றன.இவற்றின் மீது பல்வேறு மோசடி புகார்கள் தொடர்ந்து வருகின்றன. வருமான வரித்துறை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே விசாரணையும் நடத்தியுள்ளனர்.இந்நிலையில், திருச்சி பிராட்டியூரைச் சேர்ந்த பொறியாளர் மிதுன் சமேஷ் என்பவர், திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதில், ‘எல்பின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 மாதத்திற்குள் 3 மடங்கு திருப்பித் தருவதாக கூறியதை நம்பி, இந்த நிறுவனத்தில் கடந்த 2019 நவம்பர் மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரை பல்வேறு கட்டங்களாக ரூ. 72.82 லட்சம் முதலீடு செய்தேன்.நண்பர்கள், உறவினர்கள் மூலம் மொத்தம் ₹ 2 கோடியே 18 லட்ச முதலீடு செய்துள்ளோம். இதை இரண்டு, மும்மடங்காக, 4 கோடியே 68 லட்ச ரூபாயை தருவேன் என்று ஆசை வார்த்தைகளைக் கூறினர். அதற்குரிய காசோலைகள் வழங்கினார்கள்.ஆனால் அதை வங்கியில் செலுத்த சென்ற போது, அந்த அக்கவுண்ட்டில் பணம் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.பணத்தை நேரடியாக சென்று கேட்டபோது, பலமுறை அலைகழித்து, திரும்ப தராமல் மோசடி செய்து விட்டனர். கடந்த மாதம் சென்று பணத்தைக் கேட்ட போது, அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்று அந்த புகாரில் கூறியுள்ளார்.இது குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர், பொருளாதார குற்றப்பிரிவு, கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.மேலும், எல்பின் உரிமையாளர் ராஜா, அவரது தம்பி ரமேஷ் இருவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மாநில நிர்வாகிகளாக இருந்தனர். கடந்த 2019ம் மக்களவைத் தேர்தலின் போது இவர்களது காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 கோடி ரொக்கப்பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு எல்பின் ராஜா, பா.ஜ.கவில் சேர்ந்தார்.இவர்கள் மீது விருதுநகர், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் மோசடி மற்றும் மிரட்டல் புகார்களை அளித்துள்ளனர்.நடிகர் விமல் நடித்துள்ள எங்க பாட்டன் சொத்து என்கிற திரைப்படம் உட்பட 2 படங்களையும் தயாரித்துள்ளனர். கவிஞர் பா.விஜய் உள்ளிட்டோரிடமும் நெருக்கமாக இருந்துள்ளனர். திருச்சியில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்த முக்கிய பங்காற்றினர்.திரையுலக பிரபலங்களையும் அழைத்து வந்து பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளனர். அவர்களோடு நெருக்கமாக இருப்பது போல் வெளிக்காட்டியுள்ளனர். எனவே திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த மோசடியில் தொடர்பிருக்கிறதா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.