திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு மாநகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்களுடன் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதாள சாக்கடை பணியை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, சீரான குடிநீர் விநியோகம், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். உடன் மாவட்ட ஆட்சியர் சிவராசு, எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.