தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா மனைவி மறைவு : திருச்சி எம்.பி. சு. திருநாவுக்கரசு இரங்கல்
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்முன்னாள் மத்திய அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் . ஆ. ராசா அவர்களின் துணைவியார் சகோதரி பரமேஸ்வரி உடல் நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி அறிந்து மனம் மிக வருந்துகிறேன். அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை துயருடன் தெரிவித்துக்கொள்கிறேன். தனது அன்பு துணைவியாரை இழந்து வாடும் அருமை சகோதரர் ஆ. ராசா அவர்களுக்கும் அவருடைய பிள்ளைகள் குடும்பத்தினர் உறவினர்கள் ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.