திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலை அடிவாரத்திலுள்ள எம்ஜிஆர் நகரில் படிப்பறிவில்லாத கூலித்தொழிலாளி சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றனர் இதில் 18 வீடுகளுக்கு கடந்த 12 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லை. மின்சாரம் வேண்டி பல முறை மின்வாரியத்தில் மனு கொடுத்தும் இதுவரை மின்சார வசதி செய்து தரவில்லை என்றும் துறையூர் – பெரம்பலூர் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்
தற்போது தங்கள் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருவதாகவும் ஆன்லைன் வகுப்பினை தொடர்வதற்கு செல்போனுக்கு சார்ஜ் செய்வதற்கு கூட வழி இல்லை என்றும் நண்பர்கள் வீட்டில் தினந்தோறும் சார்ஜ் செய்து படித்து வருவதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து தருவதாக கூறிய பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்
