புள்ளம்பாடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் நல்லூர் தெரணிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்து சாலை, வடிகால் உள்ளிட்ட கட்டமைப்புகளை சீரமைத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
உடன் லால்குடி எம்.எல்.ஏ. சவுந்தராபாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.