பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திய திருச்சி சரக காவல்துறை துணை தலைவர்

0 195
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நெ1 டோல்கேட் ரவுண்டானா பகுதியில் இன்று காலை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா தலைமையில் கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு இன்று நடைப்பெற்றது. கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.முகக்கவசம் அணிவது,சானிடைசர் பயன்படுத்துவது,தேவையின்றி வெளியில் சுற்றாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்பது உள்ளிட்ட அறிவுரைகளை பொதுமக்களிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வகையில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு் வழங்கினார். மேலும் முக கவசம், சனிடைசர் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார். இந்நிகழ்வில் கொள்ளிடம் காவல் நிலைய காவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.