வடக்கு தத்தமங்கலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கல் : ஊராட்சி ஒன்றிய தலைவர் தொடங்கி வைத்தார்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு தத்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க மையத்தில் கொரோனா நிவாரண நிதி முதல் தவனை ரூபாய் 2000 த்தை குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.கொரோனா வைரஸ் தொற்றின்்2 ம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த கடந்த 10ஆம் தேதி முதல் வருகின்ற 25 ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் பாதித்த குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தனர். இந்நிலையில் வெற்றி பெற்று கடந்த 7 ந்தேதி ஆட்சி அமைத்தனர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் வாழ்வாதாரதம் பாதித்த அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவனையாக கொரோனா நிவாரண நிதி ரூபாய் 2 ஆயிரத்தை மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஸ்ரீதர் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வழங் கினர்.இந்நிகழ்வில் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்,தத்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திருமதி நித்யா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.