மானியத்தில் நுண்ணீா் பாசன வசதி பெற விண்ணப்பிக்கலாம். வேளாண்மை உதவி இயக்குனர் அழைப்பு.

0 767
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டார வேளாண் அலுவலகம் சாா்பில் மானியத்தில் நுண்ணீா் பாசன வசதி செய்ய விண்ணப்பிக்குமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் லால்குடி வட்டாரத்தில் நடப்பு ஆண்டு 2021-2022 ஆண்டிற்கு 121 ஹெக்டோ் விளை நிலங்களில் சொட்டுநீா், தெளிப்பு நீா், மழை தூவான் அமைக்க ரூ. 63.23 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

இத்திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் நுண்ணீர் பாசன கருவிகளை பெற்று பயன் பெறலாம்.நுண்ணீர் பாசன முறையில் குறைவான அளவு நீரை கொண்டு அதிக அளவு பரப்பில் சாகுபடி செய்து அதிக விளைச்சல் பெறப்படுவதோடு களைகளின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும்  விவசாயிகள் தங்களது நிலத்துக்கான கணினி சிட்டா, அடங்கல், நில வரைபடம், ஆதாா் அட்டை,குடும்ப அட்டை,சிறு,குறு விவசாயிகள் சான்றுகளின் நகல்,இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகுமாறு லால்குடி வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஆர். ஜெயராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகவல் தெரிவித்தார்.
மேலும் விவரங்கள் அறியவும் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பயன் பெறவும் கீழ்க்கண்ட உதவி வேளாண்மை அலுவலர்கள் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 லால்குடி ஆர். சந்திரசேகர் ( 97 88 834 769 ), பூவாளூர் எடிசன் (95 85 60 4657 ),அன்பில் விசுவநாதன்( 6369 332 477),  வாளாடி ராஜசேகரன் (984 248 3518), நகர் கதிரேசன்(8 838 758 168), மகிழம்பாடி  கவிதா( 637907 4311) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.