முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம் வழங்கிட தொழிலாளர்களுக்கு பெல் நிறுவன பொது மேலாளர் கோரிக்கை
திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவன ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு கொடுப்பதற்கு தொழிலாளர்களிடம் விருப்பத்தை பெல் பொதுமேலாளர் கேட்டுள்ளார்.நாடு முழுவதும் கோவிட் 19 இரண்டாவது பெரும் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அது தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. இதனால் பல அப்பாவி மக்கள் தங்களது இன்னுயிரை இழந்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் சிரமும் அச்சமும் அடைந்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழக அரசும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதனால் பொதுமக்கள் கோவிட் 19 நிவாரன நிதிக்காக தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும்தாராளமாக நிதி வழங்குமாறு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் பல்வேறு தொழில் நிறுவனங்களும், திரைப்பட நடிகர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதியையும், பொருள் உதவியும் வழங்கி வருகின்றனர். இந்த காலகட்டத்தில் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் துணை நிற்கும் விதத்தில் திருவெறும்பூரில் உள்ளமத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் இதில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்களது ஒரு நாள் சம்பளம் அல்லது ஈட்டிய விடுப்பு தொகை, அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி, கூடுதல் நிதி கொடுக்க விரும்புவோர் அல்லது கொடுக்க விருப்பமில்லாதவர்கள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கலாம் என கூறி மின்னஞ்சலில் அதற்குரிய படிவத்தை தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பொது மேலாளர் முரளி அனுப்பியுள்ளார். விருப்பமுள்ளவர்கள் வரும் 24 ஆம் தேதிக்குள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்துபெல் தொமுச தொழிற்சங்க பொதுச்செயலாளரும் கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளருமான தீபனிடம் கேட்ட போது திருச்சி பெல் நிறுவனத்தில் சுமார் 6,000 பேர் வேலை பார்த்து வருவதாகவும் அவர்கள் அனைவரும் இதில் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறைந்தது ஒன்றரை கோடியில் இருந்து 2 கோடி ரூபாய் வரைதமிழக முதல்வரின் கோவிட் 19 நிவாரண நிதிக்கு திருச்சி பெல் நிறுவனம் வழங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், அதேபோல் ராணிப்பேட்டை, திருமயம், சென்னை ஆகிய இடங்களில் உள்ள பெல் நிறுவனங்களில் வேலை பார்த்து வரும்அவர்களும் தங்களது ஒருநாள் ஊதியத்தை தமிழக முதல்வரின் கோவிட் 19நிவாரண நிதிக்கு வழங்கவேண்டுமென கூறியுள்ளதாகவும்,அதற்கு அந்த தொழிற்சாலைகளில் உள்ள தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களிடம் பேசி கலந்து ஆலோசித்து முடிவு செய்வதாக கூறி உள்ளதா கூறியதாக தெரிவித்தார்.