லால்குடியில் நகர திமுக சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வை எம். எல்.ஏ சௌந்திரபாண்டியன் துவங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடியில் நகர திமுக சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வை இன்று லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்திரபாண்டியன் துவக்கி வைத்தார்.கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வை லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார்.லால்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், நகரக் கழகச் செயலாளர் துரை மாணிக்கம், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் கழக நிர்வாகிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.