காவிரி ஆற்றில் புதைக்கப்பட்ட ரவுடி உடல் தோண்டி எடுப்பு – 5 பேர் கைது

0 765
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடக் கரையில் சக நண்பர்களின் உறவினர்களுக்கு ( பெண்கள் ) பாலியல் தொந்தரவு கொடுத்தரவுடியை மது போதையில் இருந்த மற்ற நண்பர்கள் கொன்று புதைத்த சம்பவம் – ஸ்ரீரங்கம் காவல் துறையினர் 5 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

 

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்  பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி நவீன்,பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய இவர் கடந்த 7ஆம் தேதி நண்பர்களுடன் கொள்ளிட கரையில் மது அருந்தியதாக தகவல் கிடைத்தது. அதன் பிறகு அவரை காணவில்லை என்பதால்  அவருடைய தந்தை தனது மகனை கண்டுபிடித்து தருமாறு ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,போலீசார் விசாரணையை தொடங்கினர் அவருடன் நெருக்கமாக இருந்த 7 க்கும் மேற்பட்டவர்களை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தி எந்த தகவலும் கிடைக்கவில்லை,இந்நிலையில் நேற்று மீண்டும் தீவிர விசாரணையை தொடங்கிய நிலையில் கடந்த 7ஆம் தேதி இவர்கள் அனைவரும் மது அருந்தும் போது நவீனுக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது அடித்துக் கொன்று கொள்ளிடக் கரையில் புதைத்துள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரனை செய்த போது இவர்களுடன் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் உறவினர்களை
தொடர்ந்து மிரட்டி அவர்களுடன் உறவு வைத்துக் கொண்டதால் அதனை தட்டிக் கேட்டும் அவர் தொடர்ந்து மிரட்டியதால் கொலை செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் காவல் துறை உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி மற்றும் ஸ்ரீரங்கம் காவல் நிலைய ஆய்வாளர் கழனியப்பன் மற்றும் தாசில்தார் மகேந்திரன் உள்ளிட்டோர் தலைமையில்  ரவுடி நவீனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்,அதன் பின்னர் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இதில் ஒரு ரவுடி வீட்டு விசேஷத்திற்காக பார்ட்டி வைப்பதாக அவரை கொள்ளிட கரைக்கு அழைத்து தான் கொலை சம்பவத்தை நிகழ்த்தியதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தமம்மி என்கிற சந்திரு ( 39 )கோவில் பிள்ளை ( 47 ) ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த டாங்கி என்கிற சங்கர் (32),மணிமாறன் (34),கீழ வாசலை சேர்ந்த விஜயகுமார் (37) ஆகிய 5 நபர்களை ஸ்ரீரங்கம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்,அவர்களிடம் மேலும் தீவிர விசாரனை நடைபெற்று வருகிறது. இந்த கொலை தொடர்பாக மேலும் பலருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக காவல் துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.