கொட்டப்பட்டு அருகே குடிநீரில் சாக்கடை கலக்கும் அவலம் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை

0 719
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் பால்பண்ணை கொட்டப்பட்டு அருகே இந்திரா நகர் பகுதியில் குடிநீரும் சாக்கடையும் கலந்து வருவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

திருச்சி கொட்டப்பட்டு ஜீவா நகர் அருகே குடிசை பகுதிகள் இருந்து வருகின்றன. இப்பகுதியில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீரில் சாக்கடையும் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு உள்ள இரண்டு பைப்புகள் சாக்கடை நடுவை இருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு அப்பகுதி மக்கள் உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் மிக முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.