உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.50 லட்சம் பறிமுதல்
வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது பொய்கைப்பட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி(வயது 26) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.50 லட்சம் எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் மணப்பாறை நகராட்சி ஆணையர் சியாமளாவிடம் ஒப்படைத்தனர்.