ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.80 கோடி சொத்து மீட்பு!

0 504
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 70 சென்ட் நிலம் திருவானைக்காவல் சென்னை டிரங்க் ரோட்டில் உள்ளது. அதில் 6 சென்ட் இடத்தை தனியார் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு இரவோடு

இரவாக ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்து இருந்தார். இதுபற்றி தகவலறிந்த கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, கோயில் வக்கீல் சீனிவாசன் மற்றும் கோயில் பணியாளர்கள் சென்று பொக்லைன் உதவியுடன் அந்த இடத்தை மீட்டனர். அந்த இடத்தின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.ஒரு கோடியே 80 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.